எமது குருநாதரின் சித்தர் பாடல்களின் ஆய்வில் கண்டுபிடித்த முக்கியமான விடயங்களில் ஒன்று, அகத்தியர் சிவபெருமானின் சீடர்களில் ஒருவர் என்றும், அவருக்கு சிவபெருமான் பிரத்தியேகமாக ஒரு ஜீவசொரூபமாலையை அணிவித்தார் என்றும், அது போன்ற மாலையை தான் இராமலிங்கப் பெருமானாருக்கும் அணிவித்தார் என்றும் திருவருப்பா ஞான விளக்கம் நூலில் வெளியிட்டிருந்தார்.

இந்த நூலை படித்த அன்பர் ஒருவர் தமது ஊரில் அகத்தியர் ஒரு வித்தியாசமான மாலை அணிந்த 1800 ஆண்டுகள் பழமைவாய்ந்த அகத்தியர் சிலை ஒன்று உள்ளது என்றும் அதை புகைப்படம் எடுத்தும் அனுப்பி இருந்தார். அதை ஆய்வு செய்து அது சரியானதே என்றும் அதை நமது கோவிலில் பெரியோர்களின் அனுமதியுடன் பிரதிஷ்டை செய்து அருள் பாலிக்குமாறு செய்தார்.

அகத்தியப் பெருமானை கருணையோடு வணங்கி அருள் பெறுவோமாக!